search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் நரிக்குறவர் மாணவ-மாணவிகள் இன்ப சுற்றுலா
    X

    பெரியகோவில் முன்பு குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.

    தஞ்சையில் நரிக்குறவர் மாணவ-மாணவிகள் இன்ப சுற்றுலா

    • தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது.
    • தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இச்சுற்றுலாவை வழி நடத்தினார்.

    தஞ்சாவூர்:

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் நேற்று 1-ந்தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு, தூய்மை பணி முகாம், சுற்றுலா விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நடை பயணம், கைவினைப் பொருள் செயல்முறை விளக்கம், சுற்றுலா கருத்தரங்கு, கோலப்போட்டி, புகைப்பட ப்போட்டி, ஓவியப்போட்டி, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

    இந்நிலையில் நிறைவு நாளான நேற்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், புதுக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் 35 பேருக்கு இன்ப சுற்றுலா தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவில், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம், 7டி திரையரங்கம் மற்றும் சிறுவர் தொடர்வண்டி பயணம் என குழந்தைகள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். கலெக்டரின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் தஞ்சை தாரகைகளின் ஒருங்கி ணைப்பாளர் மணி மேகலை தலா ஒரு ஜோடி தலையாட்டி பொம்மையை நினைவு பரிசாக வழங்கினார். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இச்சுற்று லாவை வழி நடத்தினார்.

    Next Story
    ×