என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியங்குடியில் புதிய நகராட்சி வணிக வளாகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்- அமைச்சர் நேருவிடம், ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
- காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் நகரின் மையப்பகுதியில் சுமார் 28 செண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது.
- புளியங்குடி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
புளியங்குடி:
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புளியங்குடி நகராட்சிக்கு சொந்தமான காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை யான கட்டிட வளாகம் ஆகும். மேற் குறிப்பிட்ட காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் சுமார் 28 செண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது.
காந்தி நினைவு தினசரி வியாபாரிகளின் கோரிக்கைப்படி அப்பகுதியில் வைத்திருந்த வியாபாரிகளின் வாழ்வா தாரம். கருதி மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி இடத்தில் புதிய காந்தி வணிக வளாகம் தரைதளம் மற்றும் முதல் தளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும், தென்காசி மாவட்ட கலெக்டர் கடிதத்தின் படி புளியங்குடி நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு வடக்கு ரதவீதியில் வருவாய் துறைக்கு சொந்தமான வார்டு-ஈ பிளாக்-2. டி 5.நம்.1/7- ல் 30 செண்ட் நிலமும், சுகாதார நிலையம் கட்டுவதற்கு 20 செண்ட் நிலமும் ஒதுக்கீடு செய்து அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புளியங்குடி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு உத்தேச தொகை ரூ.10 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தருமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின் போது சதன் திருமலை குமார் எம்.எல்.ஏ. மற்றும் புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.