என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் பகுதியில் வீட்டு தண்ணீர் தொட்டிகளில் கம்பூசியா மீன்கள் விடப்பட்டது
- சாத்தான்குளம் வட்டார பகுதிகளில் சுத்தமான நீரில் வளரும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்களை ஒழிக்க கம்பூசியா மற்றும் கப்பீஷ் மீன்கள் வீடுகளில் நீர்தொட்டிகளில் விடப்பட்டன.
- பூட்டிய நிலையிலே உள்ள வீடுகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி சவாலாக உள்ள நிலையில் கீழ்நிலை தொட்டிகளில் மீன்கள் தொடர்ந்து விடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
சாத்தான்குளம்:
தமிழக அரசின் தீவிர காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தூத்துக்குடி சுகாதார பணிகளின் துணை இயக்குனர் பொற்செல்வன் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி ஆலோசனையின் பேரில் சாத்தான்குளம் வட்டார பகுதிகளில் சுத்தமான நீரில் வளரும் டெங்கு காய்ச்சலை பரப்பும் எடிஸ் கொசு புழுக்களை ஒழிக்க கம்பூசியா மற்றும் கப்பீஷ் மீன்கள் வீடுகளில் உள்ள ஆழ்நிலை நீர் தேக்க தண்ணீர் தொட்டிகள், நீர்நிலைகள் மற்றும் கொள்கலன்களில் விடப்பட்டன.
சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் தலைமையிலான மஸ்த்தூர் பணியாளர் குழுவினர் இதனை வீடுகள் தோறும் விட்டு வருகிறார்கள்.
முதற்கட்டமாக சாத்தான்குளம் செட்டி யார் கீழத்தெரு, மேல சாத்தான் குளம், பங்களாத்தெரு, மேல ரத வீதி, சவரிமுத்து நாடார் தெரு, ஆர்.சி.கோவில் தெரு மற்றும் தட்டார் தெற்கு தெரு போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் விடப்பட்டன.
தொடர்ந்து தொட்டியை சுத்தம் செய்ய முடியாத நிலையில் முதியோர்கள் உள்ள வீடுகள், பூட்டிய நிலையிலே உள்ள வீடுகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி சவாலாக உள்ள நிலையில் கீழ்நிலை தொட்டிகளில் மீன்கள் தொடர்ந்து விடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரி வித்தனர். தேவைப்படுவோர் அணுகும் பட்சத்தில் அனைத்து தொட்டிகளிலும் விடப்படும்.
ஏற்கனவே களப்பணி யாளர் மூலம் கொசு புழு ஒழிப்பு பணி, தண்ணீர் தொட்டியில் அபேட் மருந்து தெளிப்பது, முதிர் கொசுவை அழிக்க வீட்டினுள் புகை மருந்து அடித்தல் போன்ற பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் போது சுகாதார ஆய்வாளர் அருண், மஸ்தூர் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்