search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதமலை கோவிலில்   கந்தசஷ்டி விழா காப்புகட்டும் நிகழ்ச்சி
    X

    மருதமலை கோவிலில் கந்தசஷ்டி விழா காப்புகட்டும் நிகழ்ச்சி

    • 30-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது
    • 16 வகை திரவியங்களான அபிஷேகம் செய்து தீபாராதனை நடைப்பெற்றது.

    வடவள்ளி,

    கோவையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு.

    இந்த நிலையில் கோவிலில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. முன்னதாக விழா நாளான இன்று காலை 5. 30 மணிக்கு கோ பூஜை செய்து நடை திறக்கப்பட்டு உற்சவருக்கு 16 வகை திரவியங்களான பால், நெய், மஞ்சள், உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைப்பெற்றது.

    பச்சை பட்டு உடுத்தி ராஜா அலங்காரத்தில் உச்சவர் காட்சியாளித்தார். மேலும் விழா நிகழ்வாக 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. 8.30 மணிக்கு புனித மண் எடுத்தல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து சுவாமிக்கு காப்புகட்டும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

    முன் மண்டபத்தில் மோசிக வாகனத்தில் விநாயகரும் , தங்கயானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமியும், வெள்ளை குதிரை வாகனத்தில் வீரபாகுவும், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தொடர்ந்து 9 மணிக்கு விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல காலை மாலை யாகம் வரும் 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைப்பெகிறது.

    இதனை தொடர்ந்து வரும் 30-ந் தேதி மதியம் 3 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. மறுநாள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை திருக்கால்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×