என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் பல வண்ணங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள் - ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது
    X

    விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெறுவதையும், தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகளையும் படத்தில் காணலாம்.

    நெல்லையில் பல வண்ணங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள் - ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது

    • விநாயகர் சதுர்த்தியையொட்டி பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள்உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.
    • கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.

    நெல்லை:

    நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி(திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது.

    நெல்லை

    தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் வீடுகளிலும், பொதுவான சில இடங்களிலும் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். பின்னர் அவை மக்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

    நெல்லை மாவட்டத்திலும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டா டப்படும்.

    பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்கள், வீடுகள் மற்றும் கோவில்களில் ஆயிரக்கணக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது. அங்கு ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் சுமார் 15-க்கும் மேற்பட்ட வடமாநிலத்த வர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து சிலைகள் தயாரித்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு 3 அடி உயரம் முதல் 9 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்தபட்சமாக விநாயகர் சிலை ரூ.100 முதலும், அதிகபட்சமாக பெரிய சிலைகள் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படு கின்றன. கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.

    பல்வேறு வடிவங்கள்

    அங்கு சிவன், பார்வதியுடன் கூடிய விநாயகர், லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்க ளிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணர்- ராதை, வெற்றி விநாயகர், எலி மற்றும் புலியின் மேல் அமர்ந்திருக்கம் விநாயகர், ராஜ விநாயகர், சுயம்பு விநாயகர் என பல வடிவங்களில் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறாக தயார் செய்யப்படும் சிலைகள் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    Next Story
    ×