search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ெபாது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதி தொடக்கம்
    X

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ெபாது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதி தொடக்கம்

    • இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ெபாது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.
    • இதில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் எழுதுகிறார்கள்.

    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறை சார்பாக தேசிய தேர்வு முகமை இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொதுபல்கலைக்கழக நுைழவுத் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது.

    மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்தநிலையில் மாணவ- மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன் கருதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) -2022 நாடு முழுவதும் 554 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நடைபெற உள்ளது.

    43 மத்திய பல்கலைக்கழகங்கள், 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், 18 தனியார் பல்கலைக்கழகங்கள் என 86 பல்கலைக்கழங்களில் அட்மிஷனுக்கு 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் பதிவு செய்துள்ளனர்.

    வருகிற ஜூலை மாதம் 15-ந்தேதி நுழைவுத் தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந்தேதி, 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதியும் மற்றும் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை கம்ப்யூட்டர் வழியாக நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மாணவ- மாணவிகள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதாவது தவறாக பதிவு செய்து இருந்தால் அதனை இன்று முதல் நாளை நள்ளிரவு 11.50 மணி வரை திருத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இந்த இறுதி கட்ட வாய்ப்பை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

    Next Story
    ×