search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி அடித்து செல்லப்பட்ட சம்பவம் எதிரொலி- பழைய குற்றாலம் அருவி தடாகத்தில் தடுப்பு கம்பிகள் அமைப்பு
    X

    அருவி தடாகத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட போது எடுத்த படம்.


    சிறுமி அடித்து செல்லப்பட்ட சம்பவம் எதிரொலி- பழைய குற்றாலம் அருவி தடாகத்தில் தடுப்பு கம்பிகள் அமைப்பு

    • ஹரிணி அருவி தடாகத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாள்
    • தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் துவாரம் இருந்ததால் சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி பழைய குற்றால அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த பொழுது அருவி தடாகத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஹரிணி என்ற 4 வயது சிறுமியை விளாத்திகுளத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர் பத்திரமாக மீட்டார்.

    இந்நிலையில் அருவிப் பகுதியில் இருந்து தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் துவாரம் இருந்ததால் சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலை உடனடியாக அருவிக் கரையில் நேரில் பார்வையிட்டு தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் இருந்த துவாரத்தில் உடனடியாக இரவோடு இரவாக இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியில் ஊழியர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார்.

    துரிதமாக செயல்பட்டு தடுப்பு கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுத்த ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×