என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாணவியை கொன்று புதைத்த விவகாரம்: உடந்தையாக இருந்த மேலும் ஒரு வாலிபர் போலீசாரிடம் சரண்
- சென்னையில் தலைமறைவாக இருந்து இளம்பெண்ணின் காதலன் அகிலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் அருண் (வயது 21) கஞ்சனூர் போலீசாரிடம் நேற்று இரவு சரணடைந்தார்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் சுடுகாட்டின் அருகில் 100 நாள் வேளையின் பள்ளம் தோண்டினர். அப்போது இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இறந்த பெண் 17 வயதிலிருந்து 19 வயதிற்குள் இருக்கலாம் என்றும், இளம்பெண் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்தது. இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர், சென்னையில் தலைமறைவாக இருந்து இளம்பெண்ணின் காதலன் அகிலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி அவரது நண்பர் சுரேஷ்குமாரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில்இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் பழைய கருவாச்சியை சேர்ந்த அருண் (வயது 21) கஞ்சனூர் போலீசாரிடம் நேற்று இரவு சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அருண் கூறியதாவது:- இளம்பெண் 3 மாதம் கருவுற்றதால், திருமணம் செய்து கொள்ள அகிலனை வலியுறுத்தினார். அகிலன் திருமணம் செய்வதாக கூறி, இளம்பெண்ணை கடந்த 3-ந்தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்றினார். அவர்களுடன் நானும் தனி மோட்டார் சைக்கிளில் சென்றேன். அப்போது, இளம்பெண்ணுக்கும், அகிலனுக்கும் அரியலூர் அருகே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அகிலன் இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இதில் இளம்பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அகிலனும், நானும் இளம்பெண்ணின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்தோம். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சுரேஷ்குமார் உதவியுடன் சாலவனூர் சுடுகாடு அருகே புதைத்து விட்டோம். இந்த சம்பவத்தில் அகிலன், சுரேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியவந்தது. அடுத்து என்னை தேடுவார்கள் என்பதால் நானாகவே வந்து சரணடைந்துவிட்டேன் என்று கூறினார்.
இதனையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கஞ்சனூர் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் நடந்து சில தினங்களில் துப்பு துலக்கி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கஞ்சனூர் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்