என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் இருந்து ராமானுஜம்புதூர் வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும்- கிராம மக்கள் கோரிக்கை
- நெல்லையில் இருந்து மூலக்கரைப்பட்டி. ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர், சிந்தாமணி, மீரான்குளம், பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு அரசு பஸ் தடம் 137டி இயங்கி வருகிறது.
- திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம், கலுங்குவிளை, கருங்குளம் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 232 அரசு பஸ்சும் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்:
நெல்லையில் இருந்து மூலக்கரைப்பட்டி. ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர், சிந்தாமணி, மீரான்குளம், பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு அரசு பஸ் தடம் 137டி இயங்கி வருகிறது. இந்த பஸ் காலை, மாலை இருவேளை இந்த வழித்தடத்தில் இயங்கி வருகிறது.
ஆனால் தற்போது காலை 4.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர் செல்லாமல் மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி சிந்தாமணி,மீரான்குளம் வழியாக நேரடியாக பேய்க்குளம் வந்து செல்கிறது. இதனால் இந்த பஸ்சை எதிர்பார்த்து ராமானுஜம்புதூர் மக்கள் ஏமாற்றமடையும் நிலை ஏற்படுகிறது.
இந்த பஸ் இல்லாததால் ராமானுஜம்புதூர் பகுதி மக்கள் 8 கிலோமீட்டர் தூரமுள்ள பேய்க்குளம் வர கருங்குளம் சென்று வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதே போல் ராமானுஜம்புதூர் வழியாக பேய்க்குளம், சாத்தான்குளம், புத்தன்தருவைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 305 அரசு பஸ் கடந்த 4ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம், கலுங்குவிளை, பேய்க்குளம், சிந்தாமணி, ராமானுஜம்புதூர், கருங்குளம் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 232 அரசு பஸ்சும் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பஸ்சை பயன்படுத்தி வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ராமானுஜம்புதூரை புறக்கணித்து செல்லும் தடம் 137டி அரசு பஸ்சை மீண்டும் அதே வழியாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்கிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.