search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈஸ்வரன் கோவிலை கையகப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை
    X

    பழமையான ஈஸ்வரன் கோவில்

    ஈஸ்வரன் கோவிலை கையகப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை

    • கூடலூரில் பழமையான ஈஸ்வரன் கோவிலை கையகப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை
    • இதனால் உள்ளூர் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர் :

    தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து தாமரைக்குளம் செல்லும் வழியில் பழமையான ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை 1446-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பூஞ்சாற்றுதம்புரான் என்ற மன்னன் கட்டியதாகவும், இக்கோவிலுக்கு மானிய மாக நிலங்களும், நீர்பாச–னத்திற்காக தாமரை–க்குளத்தையும் வழங்கியதாக கூறப்படுகிறது.

    கடந்த பல ஆண்டுகளாக கோவில் பராமரிப்பின்றி இருந்ததால் கோபுரம் மற்றும் கட்டிடங்கள் சிதிலமடைந்து வந்தன. எனவே கோவிலை புனரமைத்து பக்தர்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என இந்துமுன்னணியினர் தமிழக இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்து சமய அறநிலை-யத்துறை இணைஇயக்கு–னர் கலையழகன் உத்தரவி–ன்பேரில் தியாகராஜன் மற்றும் கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர்.

    இதனைதொடர்ந்து இந்த கோவிலை இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் அதனை ஒரு வாரத்திற்குள் மனுவாக அளிக்கலாம் என்று நகரின் முக்கிய இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. –இதனால் உள்ளூர் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு வார த்தில் தகுந்தகாரண ங்களுடன்யாரும் ஆட்சே பணை தெரிவிக்கா விட்டால் இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவையும் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×