என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் மணிமண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
- அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வலிங்கம், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தண்டுபத்து ஜெயராமன் சார்பில் அவரது மகன்கள் ரகுராம், சிவராம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், வக்கீல் சந்திரசேகர், ஆயுட்கால உறுப்பினர் அம்பி கண்ணன், உறுப்பினர்கள் அஜித்குமார், செல்வி, காயாமொழி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முகதூம் முகைதீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமையில், செயலாளர்கள் நாராயணராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆதித்தனார் கலைக்கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமி தாஸ், ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்சிலின் ஜிஜி, பத்ம ஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலை குருசெல்வி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய ஜெசிலி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ஜெயக்குமார் ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், ஹெட்கேவார் ஆதித்தன், பகவதி ஆதித்தன், தேசிகா அறக்கட்டளை நிறுவனர் குமரகுருப ஆதித்தன், சண்முகானந்தன் ஆதித்தன் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் ஜெயகணேஷ் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, துணை செயலாளர் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், வேல்சாமி, எழில் வண்ணன், ஒன்றிய தலைவர் ரமேஷ் பாலன், இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்