search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்
    X

    கோப்பு படம்.

    நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்

    • பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவிகளிடம் இருந்து ஆன்லைன்மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
    • முதலா மாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி முதல் தொடங்கும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    நிலக்கோட்ைட:

    நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பொரு ளாதாரம், பி.பி.ஏ., பி.எஸ்.சி., கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், புவியியல் உள்ளிட்ட பாடப்பிரிவு களுக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவிகளிடம் இருந்து ஆன்லைன்மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

    கடந்த 8-ந்தேதி முதல் வருகிற 19-ந்தேதி வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை கல்லூரியில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓ.சி, பி.சி, எம்.பி.சி, மாணவிகளுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2 பதிவு கட்டணம் செலுத்தினால் போதும். மாற்றுத்திறனாளி கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு மாணவி களுக்கான கலந்தாய்வு 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும்.

    முதற்கட்ட கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையும் நடைபெற உள்ளது. முதலா மாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி முதல் தொடங்கும் என கல்லூரி முதல்வர் சீனிவாசன் தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×