என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடைக்கோடி பகுதியிலும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைகிறது - அமைச்சர் பெருமிதம்
- அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு தான் முதல்-அமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
- பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் அருகே மனக்குண்ணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.17.32 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.கல்யாணசுந்தரம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன்,ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். விழாவில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:-தமிழகத்தின் கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு தான் முதலமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.அந்த வகையில் பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி மாணவ -மாண வர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறுஅவர் பேசினார்.