search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
    X

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்

    • அரசு அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார்.
    • பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு அரசு சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர்கள் சங்கர், ஆலீஸ் ஷீலா, தமிழ்நாடு அரசு அலுவலர் மாநிலத் துணைத் தலைவர் அரங்க ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 100க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்த அதே நாளில் வழங்கப்பட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர்கள் காலம் வரை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் பொது சுகாதார மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றப்பட்ட அனைத்து பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், ஒட்டுமொத்த அரசு அலுவலர் சமுதாயத்தை பலி கொடுக்கும் அரசாணை 115, அரசாணை எண் 152, அரசாணை எண் 139 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்... உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×