search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும்- இரா.முத்தரசன்
    X

    இரா.முத்தரசன்

    கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும்- இரா.முத்தரசன்

    • டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
    • பயிர் காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் வருவாய் துறை, காவல் துறை பொதுப்பணித்து–றையினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது ஈரப்பதம் காரணமாக நெல்லை விற்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் சிக்கி தவித்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்

    அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் உலர்த்தும் வசதியை தமிழக அரசே ஏற்பாடு செய்து தர வேண்டும் 2021-22ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகளை விவ சாயிகள் சந்தித்துள்ளனர்.

    தமிழக அரசு உரிய முறையில் கண்காணித்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு நிலுவை தொகையை கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×