search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் மறியல் போராட்டம்
    X

    கும்பகோணத்தில் மறியல் போராட்டம் நடை பெற்றது.

    கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் மறியல் போராட்டம்

    • தொடர்ந்து காலம் கடத்துவதைக் கண்டித்தும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜன்.

    செயலாளர் ரவி பொருளாளர் அரசு ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஏப்ரல் 2021 முதல் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, பணிக்காலத்தில் மரணம் அடைந்த தொழிலாள ர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை பல மாதங்களாக வழங்காமல் உள்ளதை இனியும் காலம் கடத்தாமல் உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் கடத்துவதைக் கண்டித்தும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×