search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்தியை இருப்பு வைக்க அரசு புதிய திட்டம்-கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தகவல்
    X

    பருத்தியை இருப்பு வைக்க அரசு புதிய திட்டம்-கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தகவல்

    • அரசு பள்ளிகளுக்கு 9 லட்சம் மீட்டர் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
    • காட்டன் கார்ப்பரேசன் இந்தியா மாதிரி காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு ஆரம்பிக்கும் திட்டம் உள்ளது.

    கோவை,

    கோவை குறிச்சியில் உள்ள சிட்கோவில், தமிழ்நாடு பஞ்சாலைக்கழக தறி கூடத்தை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசு பள்ளிகளுக்கு 9 லட்சம் மீட்டர் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2 வருடங்களாக இந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபட்டு வருகிறது.

    தற்போது பழைய விசைத்தறி எந்திரங்களை எடுத்து விட்டு ஏர்ஜெட் எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏர்ஜெட் எந்திரத்தில் என்னென்ன தேவை இருக்கிறது என ஆய்வு செய்துள்ளோம்.

    இப்போது 12 ஏர்ஜெட் எந்திரங்கள் இருக்கிறது. 12 ஏர்ஜெட் எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்பட இருக்கிறது.

    ஏர்ஜெட் எந்திரம் அமைத்து அதனுடன் சோலார் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் இந்த துறை மிகவும் லாபம் இருக்கும் துறையாக மாறும்.

    நம்மிடம் இயங்காமல் இருக்கும் 12 மில்லிற்கு மட்டும் 486 ஏக்கர் நிலம் இருக்கிறது. மணல்மேட்டில் உள்ள மில் 20 வருடமாக மூடி இருக்கிறது. 34 ஏக்கர் நிலம் அதற்கு இருக்கின்றது.

    5 தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் மூடி இருக்கிறது. அதை நாம் எடுக்க முடியாது. மொத்தமாக 125 லட்சம் பேல் பஞ்சு தமிழகத்திற்கு தேவை. ஆனால் 15 லட்சம் பேல்கள் மட்டுமே இங்கு உற்பத்தியாகின்றது.

    காட்டன் கார்ப்பரேசன் பஞ்சு எல்லாம் வடமாநிலங்களில் உள்ள குடோனில் இருந்து வருகின்றது. மேலும் காட்டன் விலையை நாம் நிர்ணயம் செய்ய முடியாது.

    காட்டன் கார்ப்பரேசன் இந்தியா மாதிரி காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது. போதிய நிதி இல்லாததால் தொடங்கு வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அது அமைந்து விட்டால் பருத்தியை நாம் வாங்கி இருப்பு வைத்து பருத்தி விலையை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.ஆய்வின்போது கைத்தறிதுறை அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நூல் துறை கமிஷனர் வள்ளலார், கைத்தறி துறை கமிஷனர் விவேகானந்தன், துணை மேயர் வெற்றிச்செல்வன் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி உள்பட பலர் இருந்தனர்.

    Next Story
    ×