search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டை ரூரல் ஊராட்சி கிராம சபை கூட்டம்
    X

    பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்த காட்சி.

    பேட்டை ரூரல் ஊராட்சி கிராம சபை கூட்டம்

    • பேட்டை ரூரல் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.
    • 6 மாதமாக துணை தலைவர் கையெழுத்து இடாமல் காலம் தாழ்த்தி வருவதால் துணைத்தலைவர் அதிகாரத்தை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.

    நெல்லை:

    பேட்டை ரூரல் ஊராட்சி கிராம சபை கூட்டம் இடகரை பகுதியில் தலைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிதண்ணீர், உடைந்த பைப்புகள் சரிபார்த்தல், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கான செலவுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர் காசோலையில் கையெழுத்திட வேண்டும்.

    கடந்த 6 மாதமாக துணை தலைவர் கையெழுத்து இடாமல் காலம் தாழ்த்தி வருவதால் பொதுமக்கள் இன்று கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர் அதிகாரத்தை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர். மேலும் ஞானம்மாள் கட்டளையில் பகுதி நேர ரேசன்கடை வேண்டி வருகிற 11-ந்தேதி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    இக்கூட்டத்தில் மானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின், கிராம நிர்வாக அலுவலர் ராஜா அங்கப்பன், ஒன்றிய கவுன்சிலர் முபீன் முகம்மது இஸ்மாயில், துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×