என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஸ்டூடியோ உரிமையாளரை கூலிப்படையை வைத்து கொலை செய்த மளிகைக் கடைக்காரர் கைது
- சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர்
- கடையை முடிவிட்டு வீடு திரும்பிய இவரை கடந்த 27-ந்தேதி இரவு மர்மக்கும்பல் வழிமறித்து கத்தியால் சராமாரியாக வெட்டினார்கள்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி சுப்புராய நகரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர். இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடையை முடிவிட்டு வீடு திரும்பிய இவரை கடந்த 27-ந்தேதி இரவு மர்மக்கும்பல் வழிமறித்து கத்தியால் சராமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே சுந்தரமூர்த்தி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும், அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்தும் போலீசார் விசாரித்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மகும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மளிகை கடைக்காரருக்கும் சுந்தரமூர்த்திக்கும் முன் விரோதம் இருந்தது. மளிகை கடைக் காரரின் மனைவிக்கு சுந்தரமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை வெளியில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மளிகை கடைக்காரரின் மனைவி கடந்த ஆண்டு இறந்து போனார். இதனால் ஆத்திரமடைந்த மளிகை கடைக்காரர் கூலிப் படையை வைத்து ஸ்டூடியோ உரிமையாளர் சுந்தரமூர்த்தியை கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மளிகை கடைக்காரரை பிடித்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்படி கூலிப்படையை சேர்ந்த மர்மக்கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் இன்று மாலை அல்லது நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.