என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மளிகை கடைக்காரர் எரித்துக்கொலை கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடியாக கைது
- மளிகை கடைக்காரர் எரித்துக்கொலை கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
- அவர்களிடம் தங்களது செல்போன் நம்பரை வாங்கிய முருகன் நல்லவன் போல பேசி வசந்தகுமார் இடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சந்தோஷ்குமார் வயது 34. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தோஷ் குமார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அருகே உள்ள நகர் கிராமத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் குமாரை காணவில்லை என புகார் அளித்தனர். அந்த புகாரைப் பெற்ற உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை தீவிரமாக தேடி வந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்றங்கரையோரம் சந்தோஷ் குமார் உடல் பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் குமாரை கொலை செய்தது யார் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் தலைமையில் இரண்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.
இதற்கிடையே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பொறியியல் படித்துவிட்டு வாடகை கார் ஓட்டி வரும் முருகன் என்பவருக்கு சம்பந்தம் இருப்பதை அறிந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட சந்தோஷ்க்கு வசந்தகுமாரி (வயது 27) என்கிற மனைவியும் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு வசந்தகுமாரி மீண்டும் கருவுற்ற நிலையில் கருக்கலைப்பு செய்வதற்காக கணவன் மனைவி இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை முடித்துவிட்டு வாடகை கார் ஒன்றில் உளுந்தூர்பேட்டைக்கு கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். அந்த காரை ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த முருகன் பொறியியல் பட்டதாரியான இவர் கணவன் மனைவி இருவரும் அன்பாக பேசி வந்துள்ளார். வீடு வந்து இறங்கும்போது அவர்களிடம் தங்களது செல்போன் நம்பரை வாங்கிய முருகன் நல்லவன் போல பேசி வசந்தகுமார் இடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
கணவன் மனைவி இருவரிடமும் நல்ல நட்பில் இருந்த சந்தோஷ் குமார் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வந்து செல்வதும் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும்போதெல்லாம் இவர்கள் பேசி பழகியும் உள்ளார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இவர்களது நட்பு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வசந்தகுமாரியின் கணவரான சந்தோஷ்குமாருக்கு தெரிய வந்தது. இருவரையும் அவர் கண்டித்துள்ளார். இதனால் சந்தோஷ் குமாரின் குடும்பத்தில் அமைதியற்ற சூழல் நிலவியது. இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி தனது மகள்களுக்கு ஆதார் கார்டு திருத்த வேண்டும் எனவும் அதற்காக கணவரை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கிறேன் அவருக்கு ஒத்தாசையாக இருந்து உதவி செய்யுங்கள் என வசந்தகுமாரி முருகனிடம் செல்போனில் தெரிவித்தார். பின்னர் மகளின் எதிர்காலத்திற்காக கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்ற சந்தோஷ் குமார் அங்கு முருகனை சந்தித்து ஆதார் கார்டு திருத்த சென்றுள்ளார் பின்னர் இருவரும் சந்தோஷ் குமார் தற்காலிகமாக வாடகை எடுத்து தங்கி உள்ள கள்ளக்குறிச்சி அண்ணா நகர் வீட்டிற்கு சென்று மது அருந்த முடிவு செய்தனர். அங்கு இவர்களது கள்ளக்காதல் குறித்து மீண்டும் சந்தோஷ் குமார் மற்றும் முருகனுடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பியர் பாட்டிலால் முருகன் சந்தோஷ் குமாரின் கழுத்தில் குற்றி படுகொலை செய்தார். சந்தோஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து அதே இடத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை தார்ப்பாயில் கட்டி தனது அக்காவிற்கு சொந்தமான மூன்று சக்கர வாகனம் ஒன்றில் எடுத்து போட்டுக்கொண்டு உளுந்தூர்பேட்டை பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கிருந்த பெட்ரோல் பங்கில் 2 லிட்டர் பெட்ரோல் வாங்கிய அவர் கெடிலம் ஆற்றங்கரை ஓரம் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவரின் சடலத்தை போட்டு பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். பின்னர் அங்கு ஆள் நடமாட்டம் தெரிவதை பார்த்த முருகன் அங்கிருந்து தப்பிச்சென்று பின்னர் ஒன்றும் தெரியாது போல நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் வெளியில் சென்ற சந்தோஷ் குமார் காணவில்லை என அவரது குடும்பத்தார் புகார் அளிக்க சென்றபோது முருகனும் அவர்களுடன் புகார் அளிப்பதற்காக போலீஸ் நிலையம் சென்றது கூடுதல் தகவல். இதனை தொடர்ந்து சந்தோஷ் குமாரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி வசந்தகுமாரி மற்றும் கள்ளக்காதலன் முருகன் இருவரையும் போலீசார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்