search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் 239 மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வு
    X

    தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    தஞ்சை மாவட்டத்தில் 239 மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வு

    • இந்த தேர்வுக்கு 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 8 மணி முதலே மையத்துக்கு தேர்வர்கள் வர தொடங்கினர்.
    • பூதலூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தாம தமாக வந்த தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகஅரசின்பல்வேறு துறைகள் மற்றும்நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும்வகையில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையர் போன்ற பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் 239 மையங்களில் குரூப்-4 தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 8 மணி முதலே மையத்துக்கு தேர்வர்கள் வர தொடங்கினர். 9 மணிக்கு அவர்கள் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

    தேர்வு சரியாக 9.30 மணிக்கு தொடங்கிமதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. 12.45 மணிக்கு பிறகே அவர்கள் மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மாவட்டத்தில் பூதலூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தாம தமாக வந்த தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் திரும்பி சென்றனர். தேர்வை முன்னிட்டு மாவட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப ட்டன.

    Next Story
    ×