search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சக்கராசனத்தில் உலக சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவன்

    • ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகாசன பயிற்சி பெற்று வருகிறார்.
    • மாணவனின் சாதனை மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த புண்ணியக்கோடி - கிரிஜா தம்பதியர் மகன் டி.பி.ஷர்வின்குமார் (வயது 11). கும்மிடிப்பூண்டி, ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், யோகாசன பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்நிலையில் சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு கையை தரையில் வைத்து, ஒரு நிமிடத்தில், 78 முறை, தலையால் தரையை தொட்டு, தண்டால் எடுத்து, உலக சாதனை படைத்துள்ளார் ஷர்வின்குமார்.

    இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. சாதனை படைத்த ஷர்வின்குமார், அவருக்கு யோகா பயிற்சி அளித்த சந்தியா ஆகியோருக்கு பாராட்டு குவிகிறது.

    Next Story
    ×