search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடங்குளத்தில் கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணியால் சுகாதார சீர்கேடு - பா.ஜனதா போராட்டம் அறிவிப்பு
    X

    பா.ஜனதா ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் கால்வாயை ஆய்வு செய்த காட்சி.

    கூடங்குளத்தில் கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணியால் சுகாதார சீர்கேடு - பா.ஜனதா போராட்டம் அறிவிப்பு

    • நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • பணிகள் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கூடங்குளம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக ஊரின் நடுப்பகுதியில் கால்வாய் கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது அந்த பணிகள் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்டும் நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    போராட்டம் அறிவிப்பு

    அந்த கால்வாயை பார்வையிட்ட பின்னர், பா.ஜனதா ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் நிதியில் கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணி நடந்தது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் வேலை தெரியாதவர்களை வைத்து பணிகளை செய்தனர்.

    தற்போது கழிவு நீர், மழை நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த சுகாதார சீர்கேட்டை வருகிற 22-ந்தேதிக்குள் ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை என்றால் பா.ஜனதா சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    Next Story
    ×