என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், இன்று மீண்டும் கனமழை
- மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சில மணி நேரம் இந்த நிலை நீடித்தது.
- நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக குளிர்ந்த காற்று வீசி வந்தது. புயல் கரையை கடப்பதற்கு முந்தைய நாள் கடுமையான குளிர் காற்று வீசியது. ஆனால் போதிய மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் தஞ்சையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. காலை 9 மணி அளவில் மிதமான மழை பெய்தது. சுமார் 40 நிமிடம் வரை மழை நீடித்தது. அதன் பின்னர் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
சில மணி நேரம் இந்த நிலை நீடித்தது. இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இம்முறை கனமழையாக கொட்டியது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தது.
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று இரவிலும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் வல்லம், பூதலூர், பாபநாசம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று மழை பெய்தது.