search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் சாரல் மழை
    X

    ஏற்காட்டில் சாரல் மழை

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளக மழை பெய்து வருகிறது. இதைதொடர்ந்து ஏற்காட்டில் சாரல் மழையால் பொதுமக்கள் குளிரால் அவதி பட்டு வருகின்றனர்.
    • ஏற்காடு மலைப்பாதையில் பனி சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்ட படியே ஊர்ந்து செல்கின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்சியாக நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    ஏற்காட்டில் குளிர்

    குறிப்பாக தம்மம்பட்டி, காடையாம்பட்டி, ஏற்காடு உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காட்டில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இரவில் பனிப்புபொழிவும் இருந்ததால் கடும் குளிர் நிலவி வருகிறது.

    காலையிலும் பனி பொழிவு நீடித்ததால் சூரியன் தலை காட்டவில்லை. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் வீடுகளிலே முடங்கினர். மேலும் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏற்காடு மலைப்பாதையில் பனி சூழ்ந்துள்ளதால் அதில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்ட படியே ஊர்ந்து செல்கின்றன.

    சேலம் மாவட்டம் முழுவதும் இன்றும் காலையும் மேக மூட்டமாக காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவியது. மாவட்டத்தல் அதிக பட்சமாக தம்மம்பட்டி 10, காடையாம்பட்டி 7.2, ஏற்காடு, அனைமடுவு தலா 5 , கரியகோவில் 3, ஆத்தூர் 2.4, சேலம் 0.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 32.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×