என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை
- மோட்டார் கொட்டைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வந்ததையும் காண முடிந்தது.
- சாதாரண மழையாக தொடங்கி விடிய இடி மின்னலுடன் கனமழைவிடிய கொட்டி தீர்த்த மழையாக மாறியது.
கடலூர், மே.2-
கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி யது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு 101 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்க தாகும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து கடும் சுட்டெரிக்கும் வெயி லாக மாறி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் திடீரென்று சில நாட்கள் காலையில் பனி பொழிவும், மதியம் சுட்டெ ரிக்கும் வெயில் இருந்து வந்தது.
கடும் வெயில் காரண மாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து, சாலை ஓரங்களில் உள்ள பழசாறுகள் பல வகைகள் நுங்கு கரும்பு சாறு குளிர்பா னங்கள் போன்றவற்றை குடித்து வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்தனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட்டம் உச்சி வெயில் நேரத்தில் குறைந்த அளவே காணப்பட்டு இருந்ததை காண முடிந்தது. இது மட்டும் இன்றி காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் கூடி ஆனந்தமாக தண்ணீரில் விளையாடி குளித்தும் மகிழ்ந்ததோடு, கிராமங்கள் பகுதிகளில் நிலப் பகுதி களில் உள்ள மோட்டார் கொட்டைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வந்ததையும் காண முடிந்தது.இந்த நிலையில் நாளை மறுதினம் மே 4-ந் தேதி முதல் கோடை வெயிலில் உச்சமாக கருதக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்ததோடு வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த காற்றும் வீசி வந்தது.
நேற்று கடலூர் நெல்லிக்குப்பம் மேல்பட் டாம் பாக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையானது நேற்று இரவு சாதாரண மழையாக தொடங்கி விடிய இடி மின்னலுடன் கனமழைவிடிய கொட்டி தீர்த்த மழையாக மாறியது.மேலும் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்ததால் குளிர்ந்த காற்று வீசி வந்ததோடு கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம், தலைமை தபால் நிலையம் எதிரில் மற்றும் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தது வருகின்ற னர். வடகிழக்கு பருவ மழை தொடங்கினால் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்வது போல் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு அக்னி நட்சத்திரம் தொடங்கு வதற்கு முன்பு கனமழை பெய்தது குறிப்பிடத் தக்கதாகும். விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என்பதனை எதிர் நோக்கி இருந்த நிலையில் இந்த திடீர் கனமழை காரணமாக அனைவரும் மகிழ்ச்சியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-
வானமாதேவி - 187.0, கடலூர் - 109.4, கலெக்டர் அலுவலகம் - 104.1, பண்ருட்டி - 90.0, வடகுத்து - 88.0, குப்பநத்தம் - 87.6, வேப்பூர் - 80.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 79.5, விருத்தாசலம் - 69.0, ஸ்ரீமுஷ்ணம் - 68.3, காட்டு மயிலூர் - 60.0, சேத்தி யாதோப் - 52.4, கீழச்செரு வாய் - 49.0, லக்கூர் - 48.0, பெல்லாந்துறை - 40.0, லால்பேட்டை - 34.0, மீ-மாத்தூர் - 30.0, காட்டு மன்னார்கோயில் - 23.0, தொழுதூர் - 21.0, குறிஞ்சிப்பாடி -18.0, அண்ணாமலைநகர் - 9.0, கொத்தவாச்சேரி - 8.0, பரங்கிப்பேட்டை - 5.4 , புவனகிரி - 2.0, சிதம்பரம் - 1.0 என மொத்தம் - 1363.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்