search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு:வாகன ஓட்டிகள் அவதி.
    X

    பண்ருட்டி பகுதியில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி சென்றன.

    கடலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு:வாகன ஓட்டிகள் அவதி.

    • இன்று அதிகாலை பண்ருட்டியில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர்/

    கடலூர்:

    தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைப்பட்ட காலமான ஜனவரி, பிப்ரவாி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது. அதன் பின்னர் வளிமண்டல சுழற்சி காரணமாக அடிக்கடி மழையும் பெய்து வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம் பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்கக்கூடிய வெயில் இதமானதாக இருக்கிறது ஆனால் இன்று அதிகாலை பண்ருட்டியில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பண்ருட்டியில் இருந்து நெய்வேலி, வடலூர் ,கும்பகோணம், தஞ்சை செல்லும் சாலை, பண்ருட்டி -சென்னைசாலை, பண்ருட்டி-கடலூர்சாலை, பண்ருட்டி சேலம் சாலை, பண்ருட்டி - அரசூர் சாலைகளில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்தில் சென்றதையும் காண முடிந்தது. பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். குளிர்ச்சியான சீதோஷன நிலையால் வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உறைநிலைக்கு சென்றதுனிப்பொழிவு குறையும் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் இரவு நேரத்தில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர். இந்த ஆண்டு வெயில், மழை, பனிப்பொழிவு என மாறி, மாறி வருவதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பண்ருட்டி பகுதியில் இன்று பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது இதனால் அதிகாலையில் பாதசாரிகள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் சிரமப்பட்டனர். கார்கள், வேன்கள், லாரிகள்,பஸ்கள் மிகுந்த சிரமத்துடன் பயணத்தை தொடர்ந்தனர் ெரயில் நிலைய வளாகம் பனிப்பொழிவால் நிரம்பிருந்தது. காலையில் வந்த எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ெரயில்கள் கடும் பனிமூட்டத்துக்கு இடையே ரெயில் நிலையத்துக்குள் வந்து சென்றன. இதேபோல் சிதம்பரத்திலும் இன்று அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம் தெரியாத வகையில் பனிப்பொழிவு காணப்பட்டது.புவனகிரி பகுதியிலும் பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.

    Next Story
    ×