என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
1-ந் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்
- சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது.
- வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மாநகராட்சியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணியாமல் சென்று வருகின்றனர். இதனால் சாலை விபத்துகளின்போது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.அதேபோல கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் பயணிந்து வருகின்றனர்.
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ெஹல்மெட் அணிவது வருகிற 1-ந் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா கூறியிருப்பதாவது:-
வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் ெஹல்மெட் அணிந்து விபத்தை தடுத்திட போலீஸ் துறைக்கு ஒத்துைழப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.