search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதங்காவெளி அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
    X

    பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

    மருதங்காவெளி அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

    • மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • வருகிற 6-ந்தேதி முதல் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்பட உள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியை தொடர வாய்ப்பு அளிக்கும் பொருட்டு வருகிற 6-ந்தேதி முதல் ஒவ்வொரு அரசு மேல்நிலை பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்பட உள்ளது.

    இக்குழுவின் உறுப்பினர்க ளாகிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் (கல்வியாளர்), கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அனைவருக்குமான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் 3-ம் நாளான நேற்று முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், நாச்சிகுளம், இடும்பாவனம், இடையூர், புத்தகரம் ஆகிய பள்ளிகளுக்கான ஆலோசனை வழங்குதல் குழு கருத்தாளர்களுக்கான பயிற்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

    இப்பயி ற்சியை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபாகரன் மற்றும் மன்னார்குடி வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் தனபாலன் ஆகியோர் முதன்மை கருத்தாளர்களாக கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியில் 125 கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் சுரேஷ், அன்புராணி ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×