என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் மூக்கண்ட பள்ளியில்,  சிறப்பு மருத்துவ முகாம்
    X

    ஓசூர் மூக்கண்ட பள்ளியில், சிறப்பு மருத்துவ முகாம்

    • “கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
    • மருந்து,மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை கர்ப்பிணி பெண்களுக்கு மேயர் சத்யா வழங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்ட பள்ளியில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

    மூக்கண்டபள்ளியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். மாநகராட்சி ஆணையாளர் சினேகா முன்னிலை வகித்தார்.

    முகாமில், ஊட்டச்சத்து பொருட்கள், மருந்து,மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை கர்ப்பிணி பெண்களுக்கு மேயர் சத்யா வழங்கி, முகாமில் பேசினார். மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன் உள்பட பலர் பேசினர். முகாமில், , மாநகராட்சி மண்டல தலைவர்கள்,பொது சுகாதாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களும், அரசு மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×