என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
ஓட்டலில் பற்றிய தீயை தீயணைப்புபடையினர் அணைத்த காட்சி.
வேப்பூரில் ஓட்டல் தீயில் எரிந்து நாசம்
By
மாலை மலர்6 Dec 2022 12:13 PM IST

- பழனிக்குமார் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
- தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டிலிருந்து சேலம் சாலையில் கரூரைச் சேர்ந்த பழனிக்குமார்,(வயது 49.) இவர் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். . நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டு பூட்டி இருந்து.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டுஓட்டல் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. இது குறித்து வேப்பூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X