என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவைில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா
- கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்,
- கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு சிக்கனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சூலூர்,
சூலூர் வட்டாரம் அரசூர் ஊராட்சிக்குட்பட்ட நாகதேவன் குட்டை பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அரசு ஊராட்சியின் சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சூலூர் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வநாயகி அன்பரசு, துணைத்தலைவர் சுதா, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை உமாசங்கரி, கிராம நிர்வாக அலுவலர்கள் அசோகன் மற்றும் ஆனந்தி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு சிக்கனம், ஊராட்சி வளர்ச்சி பணிகள் விவரம், சுகாதாரம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், திட திரவக்கழிவு மேலாண்மை, நாகதேவன் குட்டை, கொள்ளுப்பாளையம் பள்ளிக்கூடம் பின்புறம் உள்ள பகுதி மற்றும் சங்கோதிபாளையம் கள்ளிக்குழி பகுதிகளில் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.