search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
    X

    சம்பா நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

    • தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.
    • வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் இனக்களை நீக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் நடப்பு சம்பா, தாளடி நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுகிறது.

    இதன் அறிகுறிகள் என்ன வென்றால் நெற்கதிரில் உள்ள இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.

    தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

    இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும்.

    இதனை கட்டுப்படுத்தும் முறைகளாவது நெல்வயல்களில் தேவைக்கு அதிகமாக தொழு உரங்கள் இடுவதை தவிர்க்கவும். வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் இனக்களை நீக்க வேண்டும்.

    இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்பஎண்ணை ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.

    மேலும் பூச்சிச்கொல்லியை கட்டுப்படுத்த அசிபேப் அசார்டியாக்டின் குளோரோடேரேனிலிபுருள் புளுபென்டிமைட் தையமீத்தாக்கம் மருந்துகளை தெளித்து இலை சுருட்டு புழுவை கட்டுபடுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×