என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனபாலுடன் அவரது மனைவி தமிழரசி.
மோட்டார் சைக்கிள் மோதி கணவன்-மனைவி பலி
- திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை, சன்னதி ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 72).
இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.
இவரது மனைவி தமிழரசி (58).
இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், தனபால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தனபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தமிழரசியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






