search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சி கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை
    X

    கல்லிடைக்குறிச்சி கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை

    • நெசவு செய்யும் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலுடன் சார்ந்த பாவு ஓடுதல், தார் சுற்றுதல் போன்ற சார்பு தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நெசவாளர் அடையாள அட்டை
    • முதல் கட்டமாக 6 ஆயிரம் அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணி

    கல்லிடை:

    கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவுத் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், கைத்தறி வளர்ச்சி ஆணையம் சார்பில் தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவு செய்யும் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலுடன் சார்ந்த பாவு ஓடுதல், தார் சுற்றுதல் போன்ற சார்பு தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நெசவாளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கைத்தறி சேவை மைய இயக்குநர் முத்துசாமி, நெல்லை சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் சங்கரேஸ்வரி ஆகியோர் ஆலோசனையின் பேரில் முதல் கட்டமாக 6 ஆயிரம் அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணி பாளையங்கோட்டை, பேட்டை, பழைய பேட்டை, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, தெற்கு கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, வீரவநல்லூர், கிளாக்குளம், புதுக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக கல்லிடைக்குறிச்சி கைத்தறி நெசவாளர்கள், நெசவு சார்ந்த தொழிலாளர்களுக்கு நெசவாளர் சேவை மைய உதவி இயக்குநர் மாரிமுத்து முன்னிலையில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது,

    இதில், கைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, ஷேக் அப்துல் காதர், துணைத்தலைவர்கள் சாகுல்ஹமீது, பாடகலிங்கம், நெசவாளர் சேவை மைய முதுநிலை அதிகாரி சச்சின், இளநிலை அதிகாரி தீலிபன், கைத்தறி சங்க மேலாளர்கள் நடேசன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×