என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை கோட்டத்தில் விவசாய நிலங்களில் மின்வேலி இருந்தால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்- அதிகாரி உத்தரவு
- விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தியாகராஜநகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டு பொது மக்கள் அளித்த மனுக்கள் மற்றும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நெல்லை கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திர சேகரன் பேசியதாவது:-
நெல்லை கோட்டத்தில் விவசாய நிலங்களில் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து போலீஸ் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அனைத்து மின் பொறியாளர்களும் விழிப்புடன் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் தடங்கல் ஏற்பட்டால் பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமை யாக கடைபிடித்து மின் வினியோகம் வழங்க ேவண்டும்.
நெல்லை கிராமப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க ேவண்டும்.
பொதுமக்கள் குறைந்த மின்னழுத்தம் சம்பந்தமாக ஏதேனும் புகார் அளித்தால் உடனடியாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து தேவைப்படும் பட்சத்தில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கு மதிப்பீடு தயார் செய்து உடனடியாக பணிகளை மேற்கொண்டு சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயநிதி அடிப்படையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்து உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.
மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனி வுடன் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்