search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாட்டு மேஸ்திரி சந்தில் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை
    X

    தஞ்சை மாட்டு மேஸ்திரி சந்தில் ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சை மாட்டு மேஸ்திரி சந்தில் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை

    • மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • வடிகாலில் தண்ணீர் தடையின்றி செல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் இன்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார்.

    வடிகாலில் தண்ணீர் தடையின்றி செல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கடைகளை தாண்டி மேற்கூரை போடக்கூடாது.

    கடைகளை ஆக்கிரமித்து அமைக்க கூடாது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விதி மீறல்களில் ஈடுபட கூடாது.

    மேலும் மாட்டு மேஸ்திரி சந்தில் இன்று முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நடைபாதைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும் மின்விளக்கு பொருத்த உத்தரவிட்டார்.முன்னதாக நேற்று மாலை தெற்கலங்கம் பகுதியில் தனியார் நகைக்கடை சார்பில் வாகனத்தில் விளம்பர ஸ்டிக்கர் பதாகை அமைத்து ஆடியோ மூலம் விளம்பரம் செய்யப்பட்டது.

    ஆனால் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் வாகனத்தில் ஸ்டிக்கர் பதாகை அமைத்து விளம்பரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நகைக்கடைக்கு ரூ .25 ஆயிரத்தை அபராதமாக விதித்து ஆணையர் சரவணகுமார் உத்தர விட்டார்.

    இந்த ஆய்வில் மாநகராட்சி இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×