search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி - ஏப்ரல் 23-ந் தேதி நடக்கிறது
    X

    இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி - ஏப்ரல் 23-ந் தேதி நடக்கிறது

    • 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பிரமமாண்ட நிகழ்ச்சியாக இந்த நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

    திருப்பூர் :

    இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி சிங்கப்பூர் கே.எஸ்.டாக்கீஸ் சார்பில் வருகிற ஏப்ரல் மாதம் 23-ந்தேதி திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

    இதுதொடர்பான போஸ்டர் வெளியீட்டு விழா திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு போஸ்டரை வெளியிட, சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சி குறித்து கே.எஸ்.டாக்கீஸ் தலைவர் கார்த்திக் கூறியதாவது:- இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி திருப்பூரில் முதல்முறையாக நடக்கிறது.

    திருப்பூரில் சுமார் 19 லட்சம் பேர் வசிக்கும் நிலையில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் என்றால் அது கோவைக்கு சென்று மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. அதை மாற்றும் விதமாக சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பிரமமாண்ட நிகழ்ச்சியாக இந்த நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதற்கான டிக்கெட்டுகளை வருகிற 23-ந்தேதி முதல் பேடிஎம், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.499, ரூ.999 உள்பட பல்வேறு கட்டணங்களில் டிக்கெட்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் பேசும்போது, "இசைஞானி இளையராஜாவின் 80-வது பிறந்தநாள் விழா திருபபூரில் நடக்கிறது என்பது மகிழ்ச்சயாக உள்ளது. இதுவரை திருப்பூரில் நடைபெறாத வகையில் மக்களை இசை மழையில் நனைய செய்யும் இந்த மிகப் பிரமாண்ட நிகழ்ச்சியை யாரும் விட்டுவிடக் கூடாது" என்றார். நிகழ்ச்சியில் சப்போர்ட்டிங் பார்ட்னர் அஜித்ராஜா, ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×