என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரூர்பட்டி ஊராட்சியில் நரிக்குறவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு
- ஏரி பகுதியில் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்த 54 குடும்பங்கள் வசித்து வந்தனர்.
- அரசு புறம்போக்கு நிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 2 செண்ட் வீதம் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு கசுவரெட்டிபட்டி ஏரி பகுதியில் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்த 54 குடும்பங்கள் வசித்து வந்தனர். தற்போது காவிரி உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் கீழ் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் ஏரி தனது முழு கொள்ளளவான 156 ஏக்கர் முழுவதும் நிரம்பியது.
ஏரி நிரம்பியதால் உபரி நீர் நரிக்குறவர்களின் குடியிருப்பு பகுதிகளை முழுவதும் சூழ்ந்தது. இதனால் அவர்களை அனைவரும் வெளியேற் றப்பட்டு தற்போது ஆரூர்பட்டி ஊராட்சி, வெள்ளக் கல்பட்டி பகுதியில் அவர்களை நிரந்தரமாக குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக அங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 2 செண்ட் வீதம் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் வந்து பார்வையிட்டார்.
வீட்டுமனை ஒதுக்கப்பட்ட இடங்களை முழுவதும் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நரிக்குறவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் குழந்தைகள் பயில அங்கன்வாடி மையம், அதனை தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்கு 25 அடி அகல கான்க்ரீட் சாலை, குடிநீர் தொட்டி அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது ஓமலூர் தாசில்தார் வள்ள முனியப்பன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், வி.ஏ.ஓ. கலைச்செல்வி, தாரமங்கலம் ஒன்றிய ஆணையாளர்கள் கருணாநிதி, அனுராதா, ஆரூர்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் காங்கேயன், நரிக்குறவர்கள் குடும்பத்தலைவர் பார்த்திபன் உட்பட பலர் உடனிருந்தனர்.