search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பொதுமக்கள் கியூஆர் கோடு பயன்படுத்தி புகார் கொடுக்க ஏற்பாடு
    X

    கோவையில் பொதுமக்கள் கியூஆர் கோடு பயன்படுத்தி புகார் கொடுக்க ஏற்பாடு

    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி சார்பில் சுமார் 5 லட்சம் கியூஆர்கோடு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, ஆழியாறு, வடவள்ளி-கவுண்டம்புதூர் கூட்டு குடிநீர்த்திட்டம் ஆகியவற்றின் மூலம் ராட்சத குழாய்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மாநகரம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர மாநகர அளவில் போக்குவரத்து பாலங்கள், தார்சாலை, சாக்கடை கால்வாய், அங்கன் வாடிமையம், பள்ளி வகுப்பறைகள் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    கோவை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குறை தெரிவிப்பதற்கு ஏதுவாக தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர், வரிவிதிப்பு மற்றும் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து செல்போன் மூலம் கருத்துக்களை பெறுவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்காக மாநகராட்சி சார்பில் சுமார் 5 லட்சம் கியூஆர்கோடு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை வீடு-வீடாக சென்று ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-

    மாநகர அளவில் குடிநீர் விநியோகம், சொத்து வரிவிதிப்பு உள்ளிட்ட சேவைகள் மற்றும் திட்டப்ப ணிகள் குறித்து பொது மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக கியூஆர்கோடு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இது மாநகரின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்படும். எனவே பொதுமக்கள் ஆன்டிராய்டு செல்போனில் கியூஆர்கோடை ஸ்கேன் செய்து, அதன்மூலம் மாந கராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்க ளின் புகார்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார்.

    Next Story
    ×