search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் விழா  மேடை அமைக்கும் பணி தீவிரம்: மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    கள்ளக்குறிச்சி அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி விழா மேடை அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.

    கள்ளக்குறிச்சியில் அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்: மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு

    • 19- ந் தே‌தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • உலகங்காத்தான் பகுதியில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 19- ந் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் அவர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. இதையொட்டி உலகங்காத்தான் பகுதியில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பயனாளிகள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு பணிகள், வாகனங்கள் வந்து செல்வதற்கான பணிகள், தற்காலிக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து பணிகளை விரை ந்து மேற்கொள்ள பொது ப்பணித்துறை மற்றும் இதர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

    அப்போது கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் கட்டுமானப் பணிகள்) மாலா, கள்ளக்குறிச்சி தாசில்தார் சத்தியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    Next Story
    ×