search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மயிலாடுதுறையில், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

    • ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.
    • 20 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களுக்கு அரசு காலிப்பணியிடத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சந்திரா தலைமை தாங்கினார்.

    மாவட்ட அமைப்பாளர் கமலநாதன், மாநில துணைத் தலைவர் கணேசன், அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர் அஞ்சுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டத் துணைத் தலைவர் மதிவாணன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணி செய்த ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6750 அகவிலை படியுடன் வழங்க வேண்டும்.

    சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் 20 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களுக்கு அரசு காலி பணியிடத்தில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜோதி, சுசீலா, ஒன்றிய தலைவர்கள் சாந்தி, துரை நடராஜன், செயலாளர் ராதாகிருஷ்ணன் கணபதி, வாசுகி, சி.ஐ. டி.யு மாவட்ட துணை தலைவர் ராமானுஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிதி காப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×