என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முகுந்தநல்லூரில், விளிம்புநிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா- கலெக்டர் வழங்கினார்
- மாவட்டம் முழுவதும் பத்து செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
- ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் அண்ணலகராஹரம் ஊராட்சி முகுந்தநல்லூரில் விளிம்புநிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கல்யாணசுந்தரம் எம்.பி, அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்ற விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வா கத்தால் அறிமுகப்ப டுத்தப்பட்டு செயல்படுத்த ப்பட்டு வருகிறது.
இதுவரையில் மாவட்டம் முழுவதும் பத்து செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் இரண்டு கட்டங்களை உள்ளடங்கியது. முதல் கட்டம் அந்த பட்டா கொடுப்பதற்கான தகுதியான இடங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் தனியாரிடமிருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், நல்ல சாலை, கழிவுநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.
இரண்டாவதாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டிக் கொடுப்பது திட்டத்தின் நோக்கம் ஆகும். அந்த வகையில் கும்பகோணம் ஒன்றியம் அண்ணலகராஹரம் ஊராட்சி முகுந்தநல்லூர் விளிம்புநிலை மக்களுக்கு 38 விலையில்லா வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் ஒன்றிய குழு தலைவர் காயத்ரி அசோக்குமார், தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரிய நாராயணன், உதவி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், ஐயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.