என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 9¼ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்
- 15 ஆயிரத்து 908 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
- கடந்த 14 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 17 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.115.09-க்கும், குறைந்தபட்சமாக ரூ.92.94-க்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் 15 ஆயி–ரத்து 908 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.15-க்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் 44 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.85.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.57.70-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 9 சிவப்பு ரக எள் மூட்டைகள் குறைவாகவும், 5 ஆயிரத்து 365 தேங்காய்கள் கூடுதலாகவும், 22 தேங்காய் பருப்பு மூட்டைகள் குறைவாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் எள் ஒரு கிலோவிற்கு ரூ.11.80-ம், தேங்காய் 1 கிலோவிற்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் 35 பைசாவும், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு ரூ.1.39-ம் கூடுதலாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 14 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 9¼ டன் அளவில் மொத்தம் ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்து 426-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.இந்த தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்