என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முத்துப்பேட்டையில், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- ஒப்பந்த தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும்.
- தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை:
தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி மற்றும் பேரூராட்சிகளின் குடிநீர் திட்டம், தெருவிளக்கு பராமரிப்பு, தூய்மைப்பணி ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்க அரசாணையின்படி மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சி.பி.ஐ. நகர செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் முத்தையன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாரிமுத்து, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் முருகையன், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் உள்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.