என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோழி தீவன அரவை ஆலையில் பயிரிடப்பட்ட கஞ்சா செடி
Byமாலை மலர்19 Jan 2023 3:08 PM IST
- சன்னியாசி கரடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவன அரவை ஆலை இயங்கி வருகிறது.
- இந்த அரவை ஆலை வளாகத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதாக நாமக்கல் நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல் - மோகனூர் சாலையில் வகுரம்பட்டி ஊராட்சி க்கு உட்பட்ட சன்னியாசி கரடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவன அரவை ஆலை இயங்கி வருகிறது. இதில் ஏராளமான வடமாநில தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த அரவை ஆலை வளாகத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதாக நாமக்கல் நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 கிலோ எடையுள்ள ஒரு கஞ்சா செடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த செடியை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த போலீசார் இது தொடர்பாக ஆலை உரிமையாளர் குணசேகரன் மற்றும் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×