என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சேலத்தில் பள்ளி மாணவர்கள் 536 பேர் கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு சேலத்தில் பள்ளி மாணவர்கள் 536 பேர் கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/12/25/1812012-01.webp)
X
சேலத்தில் பள்ளி மாணவர்கள் 536 பேர் கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு
By
மாலை மலர்25 Dec 2022 1:29 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சேலம் மாவட்ட அளவில் கலைத்திருவிழா கடந்த வாரம் 7 மையங்களில் 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
- 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 11 ஆயிரத்து 474 பேர் பங்கேற்றனர். முதல் இடங்களை பிடித்த 536 பேர், மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
சேலம்:
சேலம் மாவட்ட அளவில் கலைத்திருவிழா கடந்த வாரம் 7 மையங்களில் 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 11 ஆயிரத்து 474 பேர் பங்கேற்றனர். முதல் இடங்களை பிடித்த 536 பேர், மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
இப்போட்டி சென்னை,
கோவை, மதுரை, திரு வள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்க ளில் வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக தேர்வு பெற்ற மாணவ- மாணவி களை அழைத்துச் செல்ல ஆசிரியர்கள் ஒருங்கி ணைப்பாளர்களாக நிய மிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று சேலம்
அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளியில் நடந்தது. அதில், மாணவர்களை அழைத்துச் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர்.
Next Story
×
X