என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோவை நிறுத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.
சீர்காழியில், 5 ஆட்டோக்கள் பறிமுதல்
- ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது.
- இவ்வாறு வாகனத்தை இயக்கினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்த லின்படி, சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநா தன் சீர்காழி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இன்று காலை திடீர் வாகன தணிக்கை செய்தார்.
அப்போது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள், தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.
தொடர்ந்து இவ்வாறு வாகனத்தை தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் பள்ளி மாணவர் ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் எச்சரித்தார்.






