search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்ட கலெக்டருக்கு பாராட்டு
    X

    கலெக்டர் மகாபாரதியை பொதுமக்கள் பாராட்டினர்.

    சீர்காழியில், ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்ட கலெக்டருக்கு பாராட்டு

    • ரூ.1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.
    • குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க தீவிரம் காட்டினார்.

    சீர்காழி:

    சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாபிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 80ஆண்டுகளாக வீடுகள் கட்டப்பட்டும், வீட்டு சுற்றுசுவர் வைத்தும், கட்டிடங்கள் கட்டப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அரியா–பிள்ளை குளத்தினை நடைபாதையுடன் அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.1.11கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தினை தூர்வாரும் பணிகள் தொடங்கிய நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சுனக்கம் ஏற்பட்டது. இதனையறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி குளத்தினை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க தீவிரம் காட்டினார். நகராட்சி ஆணையர் வாசுதேவனை தொடர்பு கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு அரியாபிள்ளை குளம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லின் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றி மீட்கப்பட்டது.

    ௮௦ ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் ஏபி.மகாபாரதியை சீர்காழி நகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×