என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், வியாபாரி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
- வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் (வயது 38) வியாபாரி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றார்.
இந்த நிலையில் கோவிலில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






